Mobirise Website Builder


சகோதர சுவிசேஷக் கூடம்



"தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை
விசுவாசிக்கிறவன் எவனோ
அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்."
யோவான். 3:16.


அன்புடன்  வரவேற்கிறோம்.

ஆராதனை

ஞாயிறு காலை 10.00 மணிக்கு


கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்தை நினைவுகூர்ந்து
( லூக்கா 22:19,20 ) பிதாவாகிய தேவனை ஆராதிக்கும்படி கர்த்தருடைய பந்தியில் கலந்துகொள்ள வேண்டும் என்பது ஒவ்வொரு விசுவாசியின் கடமையாகும். கிறிஸ்து நியமித்த ஒழுங்கின்படியும், புதிய ஏற்பாட்டின் மாதிரியின்படியும் "வாரத்தின் முதல்நாளிலே, அப்பம் பிட்கும்படி" (அப் 20:7)  கூடிவருகின்றோம்.

வேத ஆராய்ச்சி கூட்டம்

செவ்வாய் மாலை 6.30 மணிக்கு


தேவனுடைய வார்த்தையாகிய வேதாகமத்தை கற்றுக்கொள்வது கிறிஸ்துவுக்குள் வாழவும், வளரவும் விரும்பும் தேவ பிள்ளைக்கு அவசியமாகும். "வேத வாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது" (2 தீமோ 3:16).  முதல் நூற்றாண்டு விசுவாசிகள் "தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்ந்துபார்த்ததினால்.... நற்குணசாலிகளாயிருந்தார்கள்." அப் 17:11.

குடும்ப ஐக்கிய கூட்டம்

பிரதி மாதம் முதல் வியாழன் மாலை 6.30 மணிக்கு

உள்ளுர் சபை என்பது ஒரு இடத்தில் கூடிவரும் விசுவாசிகளின் ஐக்கியமாகும். அந்த ஐக்கியத்திலுள்ள விசுவாச குடும்பங்கள் தங்களுடைய அன்பையும், அந்நியோநியத்தையும் பகிர்ந்துகொள்ளவும், கிறிஸ்துவை அயலகத்தாருக்கு அறிவிக்கவும் கூடிவர வேண்டும். "வீடுகளிலேயும் இடைவிடாமல் உபதேசம்பண்ணி, இயேசுவே கிறிஸ்து என்று பிரசங்கித்தார்கள்." அப் 5:42.  

ஜெபக் கூட்டம்

வெள்ளி மாலை 6.30 மணிக்கு


முதல் நூற்றாண்டு விசுவாசிகள் "ஜெபத்திலும் வேண்டுதலிலும் தரித்திருந்தார்கள" அப் 1:14. அவ்வித கூட்டத்திலிருந்து உடலெடுத்ததே ஆதி திருச்சபை. ஜெபம் ஒரு விசுவாசியின் உயிர்மூச்சாகும். ஜெபம். நம்முடைய தேவைகளை தேவனுக்கு தெரிவிக்கும் ஒரு செயல் மட்டுமல்ல, அது தேவனோடு உறவாடுகின்ற தருணம். "நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது." யாக் 5:16

அன்புடன் அழைக்கிறோம்.

தேவனை அறியவும், ஆராதிக்கவும், வேத சத்தியங்களிலே வளரவும் சபையின் கூட்டங்களில் பங்குபெறும்படி யாவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

தொடர்புக்கு:  

+91 9942 324 324

SHARE THIS PAGE!